இலங்கை வைத்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள மாலைதீவு!

Saturday, September 12th, 2020

மாலைத்தீவு அரசாங்கத்ததினால் அந்நாட்டு வைத்தியசாலைகளில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் சேவை செய்வதற்கு இலங்கை வைத்தியர்கள் மற்றும் தாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 132 வைத்தியர்கள் மற்றும் 80 பதிவு செய்யப்பட்ட தாதிமார்களையும் வழங்குமாறு இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் பிரிவு பிரதி இயக்குனர் வத்சலா அமரசிங்கவினால் சுகாதார அமைச்சின் அவதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இலங்கையிடம் மாலைத்தீவு விடுத்த கோரிக்கைக்கமைய மாலைத்தீவில் தேசிய மட்டத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஒரு வருடங்களுக்கு வைத்தியர்கள் மற்றும் தாதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: