இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூரில் நடமாடும் சேவை!

Saturday, August 27th, 2016

இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவு, நல்லூர் ஆலய உற்சவ காலத்தில் ஆலயத்தை அண்மித்த பகுதியில் நடமாடும் சேவையினை நடாத்த தீர்மானித்துள்ளது.

இந்நடமாடும் சேவையை, நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்நடமாடும் சேவையானது வடபகுதி மக்களுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் அலுவல்கள் தொடர்பான ஆலோசனைகளையும் வழிகாட்டலினையும் வழங்கும் நோக்கத்துடன் நடத்தப்படவுள்ளது.

இந்நடமாடும் சேவையின் ஊடாக வடபகுதி மக்கள் சர்வதேச தேவைகளுக்காக ஆவணங்களை சான்று உறுதிப்படுத்துதல், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் பிறப்பு இறப்புக்களை பதிவு செய்தல், விவாகம், இலங்கை கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் பல்வேறு கொன்சியுலர் அலுவல்கள் தொடர்பான ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் அலுவலர்களும் இந்நடமாடும் சேவையில் இணைந்து கொண்டு இரட்டை பிரஜாவுரிமை, குடியுரிமை பெறுவது தொடர்பான தகவல்களையும் வழங்கவுள்ளனர்.

Related posts: