இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் தனியார் நிறுவனத்தின் வடமாகண பிரதி நிறுவன அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் தனியார் நிறுவனத்தின் வடமாகண பிரதி நிறுவன அலுவலகத்தின் திறப்பு விழா 15.02.2021 இன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது.
இதில் கடற்றொழில் அமைசசர் டக்ளஸ் தேவான்தா அவர்களின் பிரதிநிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலும்மயிலும் குகேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.
இதில் அவர் உரையாற்றுகையில்
தற்போது வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்கள் கொரோனாவால் 6 மாத காலமாக வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களை திருப்பி எமது நாட்டிற்கு எடுக்க வேண்டும். அத்துடன் தொழில் பயிற்சியை வழங்கி வெளிநாட்ற்கு அனுப்ப வேண்டும். ஏமாற்றும் தனியார் முகவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கனடா நாட்டிற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளதென சமூக வலைத்தளங்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மைதானா என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதன்போது அமைச்சர் பியங்கர ஜயரத்ன உரையாற்றுகையில் இங்கு பயிற்சிகளை வழங்கி வெளிநாட்டுக்கு அனுப்புதல் அதில் முதல் கட்டமாக ஜப்பானுக்கு அனுப்புவதாகவும் தற்போது கனடாவிற்கு பயிற்களை வழங்கி அனுப்புவதற்கு முயற்சிகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
000
Related posts:
|
|