இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III ற்கான போட்டிப்பரீட்சை!

Saturday, June 10th, 2017

இலங்கை வெளிநாட்டு சேவையில் 2016 (2017) தரம் III க்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 2017 ஜூன் மாதம் 18, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டிப்பரீட்சைக்கு தோற்றும் 3789 பரீட்சார்த்திகளுக்காக 25 மத்திய நிலையங்களில் பரீட்சை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யு என் என் ஜே புஸ்பகுமார வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்த பரீட்சைக்காக 2017 ஜுன் மாதம் 5ம் திகதி தபால் மூலம் அனைத்து பரீட்சார்த்திகளுக்குமாக அனுப்பப்பட்ட பரீட்சைக்கான அனுமதி அட்டை தொடர்பில் ஏதேனும் விபரங்களுக்கு கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்தின் மூலம் எமது திணைக்களத்தின் வெளிநாட்டு பரீட்சை கிளை அல்லது பரீட்சை பிரிவினை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும் என்று தெரிவித்துள்ளது. தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்  – 0112785230 /  0112177075 உடனடி தொலைபேசி இலக்கம்  – 1191

Related posts: