இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபை செல்வதை 2019 இல் தவிர்க்க முடியாது – போல் நியூமன்!

இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை 2019இல் ஏற்படும் என பெங்களூர் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் பேராசிரியரும், சிரேஸ்ட மனித உரிமைகள் ஆர்வலருமான போல் நியூமன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் 2019இல் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட அவகாசம் முடிவடைகின்றன. இவ்வாறு வழங்கப்பட்ட இரண்டு வருட அவகாசத்தின் போது எதுவும் செய்யவில்லை எனில் மனித உரிமைகள் ஆணையாளருக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் குறித்த விடயத்தை பாதுகாப்பு சபைக்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
Related posts:
தொற்றும் நோய் தாக்கம் : சப்ரகமுவ பல்கலை மூடப்பட்டது!
இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவு!
மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி!
|
|