இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்காவுக்கு பதிலாக களமிறங்கும் கனடா, ஜேர்மன்!

Tuesday, February 12th, 2019

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் சபையில் சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விவகாரங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க கனடா, ஜேர்மன் நாடுகள் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஜெனீவா யோசனையை முன்னோக்கி கொண்டு செல்ல கனடா மற்றும் ஜேர்மன் முன் வந்துள்ளது.

இந்தத் தகவலை ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் இரகசியமான முறையில் பிரித்தானியா தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் யோசனை ஒன்று எதிர்வரும் 25ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பிக்கும் மனித உரிமை மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விருது!
சீனாவின் சர்வதேசப் பாதை இலங்கையும் இணைகிறது
விஞ்ஞான தொழல்நுட்ப பட்டதாரிகளுக்கு ஜப்பானில் தொழில் புரிய வாய்ப்பு  - யாழில் ஜனாதிபதி மைத்திரி!
மீண்டும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட எம்.எஸ்.ஜி. இரசாயனம்!
ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பத்தவறின் 2019 இல் பாரிய சிக்கல் -  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் !