இலங்கை வான்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 3 விமானங்கள்!
Sunday, June 13th, 2021உக்ரேனில் புதுப்பிக்கப்பட்ட 3 அண்டனோவ் 32 (Antonov-32) ரக விமானங்கள், இலங்கை வான்படையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
2014 நவம்பர் மாதம்முதல் தற்போது வரையில், அந்த விமானங்கள், வான்படையின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி இருக்கவில்லை.
இதன் காரணமாக, போக்குவரத்துக்காக உலங்கு வானூர்திகளை சேவையில் ஈடுபடுத்த வேண்டிய நிலை வான்படைக்கு ஏற்பட்டது.
1995 ஆம் ஆண்டு, முதன்முறையாக, இலங்கை வான்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அண்டனோவ் 32 ரக விமானங்கள், யுத்த காலத்தில், பாரிய பங்களிப்பை வழங்கிய விமானங்களாகும்.
இந்நிலையில், தற்போது புதுப்பிக்கப்பட்ட விமானங்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமையால், இலங்கை வான்படையின் போக்குவரத்து பலம், 75 சதவீதமளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிமெந்து விலை அதிகரிப்பை அரசு இரத்துச் செய்ய வேண்டும் !
வானிலை தொடர்பில் எச்சரிக்கை – வானிலை அவதான நிலையம்!
நல்லூர் தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது !
|
|