இலங்கை வரைபடத்தில் மாற்றம்!

துறைமுக நகரம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், இலங்கை வரைபடத்தில் மாற்றம் ஏற்படும் என அளவீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அளவீட்டுத் திணைக்கள அதிபதி பீ.எம்.பீ. உதயகாந்த குறிப்பிட்டார். பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள துறைமுக நகர நிர்மாணத்தினால் நாட்டின் கரையோரத்திலும் மாற்றம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக இலங்கை வரைபடத்தை மறுசீரமைக்கும் தேவை ஏற்பட்டுள்ளதால், அதற்கென விசேட குழுவை நியமித்துள்ளதாக அளவீட்டுத் திணைக்கள அதிபர் கூறினார். குறிப்பாக அதிவேக வீதிகள் நிர்மாணிக்கப்படுவதால், அவற்றையும் இலங்கை வரைபடத்திற்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Related posts:
ஜனவரி இறுதிக்குள் வர்த்தமானி அறிவித்தல்!
சுயதொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!
பிரித்தானியாவை புரட்டிப்போடும் கொரோனா: 24 மணி நேரங்களில் 980 பேர் உயிரிழப்பு!
|
|