இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Wednesday, February 16th, 2022

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த 12 ஆம் திகதியே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர். அன்றைய தினத்தில் 4 ஆயிரத்து 677 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இதேநேரம் கடந்த ஆண்டு நாள் ஒன்றில் அதிகளவான சுற்றுலா பயணிகளின் வருகை, டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி பதிவாகியிருந்தது.

குறித்த தினத்தில் 4 ஆயிரத்து 829 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த ஆண்டின் முதல் 12 நாட்களுக்குள் மாத்திரம் 39 ஆயிரத்து 621 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: