இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை தெரிவிப்பு!
Thursday, June 16th, 2022சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
நாளாந்தம் குறைந்தது 920 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது.
இந்தநிலையில் தற்போது இந்தியாவிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை இவ்வருடத்தின் எஞ்சியுள்ள காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் துறைசார் முக்கியஸ்தர்களுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடத்திய கலந்துரையாடலின் போதே அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
0000
Related posts:
|
|