இலங்கை வருகிறார் சீனப் பிரதமர்- முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகும் என எதிர்பார்ப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துடன் உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சீனப் பிரதமர் லீ கேஜங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி அவரது விஜயம் அமையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச தலைவரான கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்முறையாக சீனப் பிரதமர் லீ கேஜங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது சீனப் பிரதமர், சீனாவின் முழுப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டு இறுதித்தறுவாயை அடைந்திருக்கும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை இறுதிப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேடமாக கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் சீனாவுக்கு கிடைக்கின்ற பங்கு உட்பட சார்ந்த ஆவணங்களில் சீனப்பிரதமர் கையெழுத்திடவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விடயங்களின் பின்னர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரையும் சீனப்பிரதமர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|