இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பீடர் டடின் இன்று(03) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரை அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, பாதுகாப்பு நிலைமை மற்றும் மனித கடத்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் நாளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானி காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும், அவர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் சட்டவிரோத செயலைத் தடுக்க மேலதிக பொலிஸார்!
பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 6 பேர் படுகாயம்!
சுற்றுலா பயணிகளின் வருகையை மேம்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டும் – துறைசார் அதிகாரிகளுக்க...
|
|