இலங்கை வருகிறார் அமெரிக்க துணை உதவி செயலாளர்!

Friday, January 10th, 2020

தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வருகை தரவுள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன்போது இலங்கையிலுள்ள அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தினர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பிராந்திய பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து அவர் கலந்துரையாடுவார் என தெரிய வருகின்றது.

இதனையடுத்து அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் அவர் பாகிஸ்தானுக்கான விஜயமொன்றினையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகின்றது.

Related posts: