இலங்கை வந்தடைந்த மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவிப்பு!

Friday, July 22nd, 2022

உலை எண்ணெய் மற்றும் பெட்ரோல் கப்பல் ஒன்று நேற்று இலங்கை வந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருட்களுக்கான தரபரிசோதனை எடுக்கப்பட்டதன் பின் எரிபொருள் தரையிறக்கம் ஆரம்பமாகும்.

உலை எண்ணெய் மின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

மேலும், வாகன இலக்கத்தட்டின் இறுதி இலக்க முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும், தேசிய எரிபொருள் அட்டைக்கான QR குறியீடு சரிபார்ப்பு மற்றும் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறித்த பதிவில் குறிப்பிட்டார்.

Related posts: