இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர்!

Sunday, June 9th, 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோசடி ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை 11.00 மணியளவில் கட்டுநாயக்க நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமர் கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் அங்குகிருந்து புறப்பட்ட மோடி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்ற அவரை கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் வரவேற்றார்.

இதனை தொடர்ந்து வழிபாடுகளை முன்னெடுத்த மோடி, பேராயரிடம் குண்டு தாக்குதல் தொடர்பாக கேட்டறிந்தார்.

Related posts: