இலங்கை வந்தடைந்தது சீனாவின் சினோபாம் – நேரடியாக சென்று பெற்றுக்கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Wednesday, March 31st, 2021

இலங்கைக்கு சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளார்..

முன்பதாக சீனத் தயாரிப்பான சினோபாம் கொரோனா தடுப்பூசியை ஏற்றிச் வந்த விமானம் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதேநேரம் தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், மருந்து வழங்கல், மற்றும் ஒழுங்குமுறைத்துறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமனா, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன அரசுக்கு நன்கொடை வழங்கியதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றின் போது இலங்கைக்கு உதவியதற்கும் அவர் சீனாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

சீன தடுப்பூசியைப் பெறுவதற்கான முயற்சிகளில் கடந்த வாரத்தில் பல தடைகள் இருந்தபோதிலும், தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு வருவதை உறுதி செய்ய அதிகாரிகளால் முடிந்தது என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங், தேவைப்படும் காலங்களில் இலங்கைக்கு உதவ சீனா எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையை மையமாகக் கொண்ட சீன நாட்டினருக்கு இந்த தடுப்பூசி முதலில் வழங்க அனுமதிக்க இலங்கை அரசு எடுத்த முடிவை அவர் பாராட்டியுள்ளார்.

குறித்த இந்நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து யாழில் இருந்து இந்தியாவிற்கு படகில் சென்று பேச தீர்மா...
பொருளாதார நெருக்கடிகளுடன் வாழ்ந்துவரும் மாணவர்களுக்கு அமைச்சரால் வழங்கப்பட்ட உதவியானது காலமறிந்து செ...
கிராமப்புற வசதிகளை மேம்படுத்த 20.6 பில்லியன் ரூபாய் செலவிட அரசாங்கம் தீர்மானம் - அமைச்சர் மஹிந்த அமர...