இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Tuesday, June 20th, 2023

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படிஇந்த மாற்றம் பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபா 28 சதம் – விற்பனை பெறுமதி 314 ரூபா 38 சதமாகவும் –

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 00 சதம் – விற்பனை பெறுமதி 403 ரூபா 52 சதமாகவும்-  யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 83 சதம் – விற்பனை பெறுமதி 344 ரூபா 88 சதமாகவும்-

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபா 63 சதம் – விற்பனை பெறுமதி 239 ரூபா 24 சதமாகவும் – 

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 61 சதம் – விற்பனை பெறுமதி 215 ரூபா 54 சதமாகவும் –

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபா 64 சதம் – விற்பனை பெறுமதி 235 ரூபா 59 சதமாகவும் நாணய மாற்று விகிதங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


மக்கள் சேவையை நேசிப்புடன் மேற்கொள்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - தெல்லிப்பளை பனை தென்னை வள சங்க த...
கொரோனா தொற்றை மறைத்தால் கடும் சட்டநடவடிக்கை - பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்சரி...
மிருக வதையை கட்டுப்படுத்த கட்டளைச் சட்டத்தில் திருத்தம் - வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்ச...