இலங்கை முதலீட்டை வலுப்படுத்தும் மாநாடு ஜப்பானில்!

ஜப்பான் டோக்கியோவில் உள்ள இம்பிரியல் மாளிகையில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பானமுதலீட்டு மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலித் சமர விக்கிரம, ஜப்பான் நாடாளுமன்ற பொருளாதார வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை துணை அமைச்சர் மசகி ஒகுசிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
முன்னாள் பிரதி அமைச்சரின் மகள் டெங்கு நோயினால் திடீர் மரணம்!
மானிப்பாய் பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட 16 ஊழியர்கள் பதவியேற்பு!
யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த ஒன்றுகூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார நடைமுறையை மீற...
|
|