“இலங்கை மீண்டெழும்பும். அதற்கு இந்தியா துணை நிற்கும்..” – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!

Sunday, June 9th, 2019

கோழைத்தனமான தீவிரவாத தாக்குதல்களால் இலங்கையை ஒன்றும் செய்துவிடமுடியாது. “இலங்கை மீண்டெழும்பும். அதற்கு இந்தியா துணை நிற்கும்..” என இலங்கைக்கு வருகை தந்திருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பின் பெயரில் ஒருநாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த பாரதப் பிரதமர் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட கொச்சிக்கடை தேவாலயத்தை பார்வையிட்டார்.

இது தொடர்பில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாரதப் பிரதமர் கோழைத்தனமான தீவிரவாத தாக்குதல்களால் இலங்கையை ஒன்றும் செய்துவிடமுடியாது. “இலங்கை மீண்டெழும்பும். அதற்கு இந்தியா துணை நிற்கும்..” என தெரிவித்துள்ளார்.

Related posts: