இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை!
Monday, June 11th, 2018ஒன்றிணைந்த அஞ்சல் சேவை பணியாளர்கள் சங்கம் இன்று மாலைமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறைகள் மற்றும் அஞ்சல் நிலையங்களுக்கான உப பொறுப்பதிகாரி பதவிகளுக்கான இணைப்புக்களின்போது, கண்மூடித்தனமான முறையில் நேர்முகப்பரீட்சை நடத்தப்படுதல் என்பனவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த கோரிக்கையை முன்னிறுத்தி அண்மையில் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பித்தக்கது.
இதனிடையே, தமது கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத பட்சத்தில், திருத்த பணிகள் மற்றும் அவசர சேவைகளில் இருந்து விலக போவதாக மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பொறியியலாளர்கள் சங்கத்தினால் தற்சமயம் சட்டப்படி வேலைச் செய்யும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின்நுற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்காதன் காரணத்தினால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.இதன் அடுத்தக்கட்டமாக கடந்த புதன் கிழமை முதல் மாலை 4.00 மணியின் பின்னர் அவசர சேவைகள் மற்றும் புனரமைப்பு பணிகளை நிறுத்தியது.
எனினும் குறித்த திட்டத்திற்கு பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இன்றைய தினம் அனுமதி வழங்கும் என வழங்கப்பட்ட உறுதி மொழியினை அடுத்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது.
வாக்குறுதி வழங்கியது போல் இன்றைய தினம் அதற்கான அனுமதி அளிக்கப்படாவிட்டால் தமது தொழிற்சங்க நடவடிக்கை மேலும் வலுப்படுத்தப்படும் என மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|