இலங்கை – மாலைதீவுக்கான விஜயத்தை இன்று ஆரம்பித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் ஆதரவை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்ப்பு!
Wednesday, January 18th, 2023இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றுமுதல் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்தியாவின் இரண்டு முக்கிய கடல்சார் அண்டை நாடுகளுடனான இருதரப்பு ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்த விஜயம் அமையவுள்ளதென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜெய்சங்கர் இன்று மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். அங்கு அவர் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்.
இதனையடுத்து, நாளையதினம் இலங்கைக்கு வருகைதரும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் இந்தியாவின் ஆதரவை வெளிப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு முக்கிய இருதரப்பு உடன்படிக்கைகளிலும் அவர் கைச்சாத்திடுவார் என்று தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|