மோசடி செய்யும இலங்கை மாணவர் போலி விவரங்கள்அனுப்புகின்றனர் – நியூசிலாந்தின் குடிவரவுத்துறைப் பணியகம்!

Thursday, August 2nd, 2018

உயர்கல்விக்காக தங்களது நாட்டுக்கு வருவதற்கு இலங்கை மாணவர்கள் போலி விவரங்கள் உள்ளடங்கிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று நியூசிலாந்தின் குடிவரவுத்துறைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மும்பை நகரில் உள்ள நியூசிலாந்தின் குடிவரவுத்துறைப் பணியகத்துக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இலங்கையில் உள்ள ஒரு நிதிநிறுவனத்தின் ஊடாகப் போலியான தகவல்களை வழங்கி நியூசிலாந்தில் உயர் கல்விக்கான வீசாவுக்குப் பலர் விண்ணப்பித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

2018 ஆம் ஜனவரி மாதம் இந்த விடயம் nதியவந்தபோது இலங்கை மாணவர்கள் அனுப்பிய 88 விண்ணப்பங்களில் 83 விண்ணப்பங்கள் போலியானவை என்று தெரியவந்துள்ளன. இவ்வாறு போலியான தகவல்களை வழங்கி சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் உயர் கல்விக்காக விண்ணப்பிக்கும்போது மாணவன் ஒருவனின் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இருக்க வேண்டும்.

இருப்பினும் குறித்த மாணவர்கள் நிதி நிறுவனம் ஒன்றின் மூலமாக போலியான வங்கிக் கணக்குகளைத் தயாரித்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் தற்போது நியூசிலாந்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை எனவும் எதிர்காலத்தில் வீசா விண்ணப்பிப்பவர்கள் தொடர்பில் கடுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் நியூசிலாந்தின் குடிவரவுத்துறை அமைச்சர் இயன்லீஸ் கலோவேய் தெரிவித்துள்ளார்.

Related posts: