இலங்கை மாணவர்களுக்கு ஜப்பான் புலமைப்பரிசில்கள்!

Friday, May 5th, 2017

ஜப்பான் அரசாங்கத்தின் கல்வி, கலாசாரம், விளையாட்டு, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு வழங்கும் புலமைப்பரிசில் இலங்கை மாணவர்களுக்கும் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பட்டப்பின் படிப்பு, பட்டப்படிப்பு, தொழில்நுட்பத்துறை என்பனவற்றிற்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்படவிருக்கின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித்தினம் எதிர்வரும் 24ஆம் திகதியாகும்.  உயர் கல்வி அமைச்சின் இணையத்தள முகவரியின் ஊடாக இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

Related posts: