இலங்கை மாணவர்களுக்கு அதிக புலமைப்பரிசில் வாய்ப்பு – இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!
Friday, November 10th, 2023இலங்கை மாணவர்களுக்கு அதிக புலமைப்பரிசில் வாய்ப்புகளை எதிர்காலத்தில் இந்தியா வழங்க உள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று (10) தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், – புலம்பெயர் குழந்தைகளுக்கான புலமைப்பரிசில் திட்டத்தின் (SPDC) மூலம் இலங்கை மாணவர்களுக்கு இந்தியா அதிக உயர்கல்வி புலமைப்பரிசில்களை வழங்கும்.
இந்தத் திட்டம் தொழில்முறை (மருத்துவ மற்றும் தொடர்புடைய படிப்புகள் தவிர) மற்றும் தொழில்முறை அல்லாத படிப்புகள் இரண்டையும் உள்ளடக்கியது.
SPDC புலமைப்பரிசிலுக்கு தகுதி பெறும் மாணவர்கள் முதல் ஆண்டு மாணவர்களாக இருக்க வேண்டும்.
புலமைப்பரிசிலுக்கு இலங்கையில் இருந்து தகுதியான மாணவர்கள் எதிர்வரும் 10 டிசம்பர் 2023 இற்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் http://spdcindia.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் எனவும் உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|