இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையே இரு தரப்பு உறவுகள்!

Tuesday, April 3rd, 2018

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையேயான இரு தரப்பு உறவுகள் மேலும் மேம்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சீன வங்கி ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த வங்கி, உள்ளூர் வர்த்த நடவடிக்கைகளுக்குஉறுதுணையாக செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சீன முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் ஏற்பட்ட பாரிய பொருளாதார மேம்பாட்டிற்கு கடந்த மூன்று தசாப்தகாலத்தில் சீன வங்கி பெரும் அளவில் உதவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியாக தற்போது சீன வங்கி நான்காவது பெரிய வங்கியாக செயல்படுவதுடன் 30 சதவீதமான வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts: