இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு – இருநாட்டு உறவு குறித்து விரிவான ஆராய்வு!

Thursday, September 23rd, 2021

இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நியூயோர்க்கில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொது சபைக்கூட்டம் அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த ஐ நா கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரிடையே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை – இந்திய உறவு குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக, எஸ். ஜெய்சங்கர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளும் பகிரப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக ஒன்றித்து செயற்படுவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: