இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் – நொக்ஸ் தாமெஸ் சந்திப்பு!

Sunday, March 18th, 2018

மத மற்றும் சிறுபான்மையினர் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் விசேட ஆலோசகரும், மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நிபுணருமான நொக்ஸ்தாமெஸ் (Knox Thames) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

அவர்களின் அடிப்படை உரிமைகளை ஊக்குவிப்பதற்கான அர்ப்பணிப்பில் தாம் ஈர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கொழும்பில் உள்ள சர்வமதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சமயத் தலைவர்களுடன் உரையாடல்களை நடத்திய அவர், அண்மையில் இடம்பெற்ற வன்முறை குறித்துகவனம் செலுத்தியதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts: