இலங்கை மத்திய வங்கிக்கு பிரதி ஆளுநர்கள் இருவர் நியமனம்!

Friday, December 18th, 2020

இலங்கை மத்திய வங்கிக்கு பிரதி ஆளுநர்கள் இருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கியில் உதவி ஆளுநர்களாக செயற்பட்ட  ஜிவட் பெர்னாண்டோ மற்றும் தம்மிக்க நாணயக்கார ஆகியோரோ புதிய பிரதி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜிவட் பெர்னாண்டோ 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை மத்திய வங்கியில் பணியாற்றியவர் என்பதுடன் இந்த காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பு திணைக்களத்தின் பணிப்பாளராகவும் அந்நிய செலாவணி கட்டுப்பாட்டாளராகவும் செயற்பட்டுள்ளார்.

அத்துடன் வங்கி மேற்பார்வை, வர்த்தக நிதி, அந்நிய செலாவணி, ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட திணைக்களங்களின் உதவி ஆளுநராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.

இதேவேளை, பிரதி ஆளுநராக புதியதாக நியமனம் பெற்றுள்ள தம்மிக்க நாணயக்கார இலங்கை மத்திய வங்கியில் 27 வருட சேவை அனுபவமுள்ள ஒருவராவார். இதற்கு முன்னர் அரச கடன், பிரதேச அபிவிருத்தி, அலுவலக சேவை முகாமைத்துவம் உள்ளிட்ட திணைக்களங்களின் உதவி ஆளுநராக இவர் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: