இலங்கை மக்கள் அனைவருக்கும் விரைவில் ஈ-சுகாதார அட்டைகள்!
Tuesday, March 13th, 2018நாட்டு மக்கள் அனைவருக்கும் இலத்திரனியல் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்வுள்ளதாக சுகாதாரம் போஷனை மற்றும் சுதேச மருத்துவம் அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சுகாதாரம் முதலில் மாநாட்டில் பங்குபற்றி உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நோயாளிகளுக்காக மட்டும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த இலத்திரனியல் சுகாதார அட்டைகள் எதிர் காலத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் இதற்கேற்ப நாட்டிலுள்ள அனைவரும் அவர்களுடைய சுகாதார நிலமை பற்றிய தகவல்களைத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஈ-சுகாதார அட்டைகள் மூலம் தனிப்பட்ட சுகாதார நிலமை பற்றி தகவல்களை வைத்தியசாலைகள் இலகுவில் அறிந்து நோயாளிகளுக்கான சிகிச்சைகளை துரிதமாகக வழங்க முடியுமெனவும் தெரிவித்தார் .இதே வேளை அனைத்து மக்களுக்கும் ஈ-சுகாதார அட்டைகளை வழங்குவதற்கான பூர்பரங்க நடவஎக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்தார்
இதே வேளை அனைத்து மக்களுக்கும் ஈ-சுகாதார அட்டைகளை வழங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென சுகாதார அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|