இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் 1.40 கோடி நிதியுதவி – முதலமைச்சர் ஸ்ராலினிடம் காசோலையாக வழங்கிவைப்பு!

Thursday, July 7th, 2022

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலிசார் சார்பில் 01 கோடியே 40 இலட்சம் (இந்திய ரூபா) நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கிவைத்துள்ளனர்..

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தமென நாடு முழுவதும் இயல்புநிலை முடங்கி வருகிறது.

இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலிஸ்துறை சார்பில் 01 கோடியே 34 இலட்சம் (இந்திய ரூபா) ரூபாவும் இந்திய போலிஸ் பணி அதிகாரிகள் சங்கம் சார்பில் 06 இலட்சத்து 63,000 ரூபாவுமென மொத்தம் 01 கோடியே 40 இலட்சம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிதிக்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக போலிஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தையிட்டி கணையவிற் பிள்ளையார் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஈ.பி.டி.பி நிர்வாகச் செயலாளர்கள் ப...
இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநக...
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் - நாடாளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியும...

கச்சாய் - பருத்தித்துறை வீதியில் 21 கிலோ மீற்றருக்கு காப்பெற் - முதற்கட்ட பணிகள் ஆரம்பம் கம்பங்கள் ப...
தனியார்துறை ஊழியர்களது ஊதியங்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில...
பாடசாலை மூலம் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் - சுகாதார ...