இலங்கை மகப்பேறு மருத்துவ சங்கத்தின் புதிய தலைவர் பிரதமாரல் நியமிப்பு!

Monday, January 4th, 2021

இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கத்தின் 35 ஆவது தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் பிரதமர் தலைமையில் பங்குபற்றுதலுடன் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டப வளாகத்தின் தாமரை மண்டபத்தில் இடம்பெற்றது.

தெற்காசியாவில் தாய், சேய் இறப்பு விகிதம் மிகக் குறைந்தளவு பதிவாவது இலங்கையிலாகும். சுகாதார அமைச்சின் அனுசரணையில் இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கம் இவ்விடயத்தில் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது. இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் 35ஆவது நிர்வாகத் தலைவரின் நியமனம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: