இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!

Monday, August 1st, 2016

சேவையிலிருந்து சுய விருப்பின் அடிப்படையில் விலகுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.

குறித்த காலப்பகுதிக்குள் 1953 பேர் சுய விருப்பின் அடிப்படையில் இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

சேவை அடிப்படையில் இராஜினாமா செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும், மீண்டும் ஒரு மாதற்திற்கு காலஅவகாசம் நீடிக்கப்பட்டது.நீடிக்கப்பட்ட ஒரு மாதக் காலப்பகுதிக்குள் 100 பேர் மாத்திரமே தங்களின் இராஜினாமா கடிதங்களை சமர்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கூறியுள்ளார்.

சேவை அடிப்படையில் சுய விருப்பின் பேரில் இராஜினாம செய்யவிருந்த 8000 பேருக்கு ஓய்வு வழங்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.அந்தவகையில் தற்போது கிடைத்துள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில், அவர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts: