இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு தட்டுப்பாடு!

Friday, January 19th, 2018

இலங்கை போக்குவரத்து சபையில் 1,350 பஸ்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது போக்குவரத்து சபையிடம் 7,329 பஸ்கள் உள்ளதாகவும் அவற்றில் 6,400 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்துவதற்கு உகந்த நிலையில்உள்ளதாகவும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஆர்.டி.பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை நாள் தோறும் ஏற்படுகின்ற இயந்திர கோளாறுகள் காரணமாகவே ஏற்பட்டுள்ளாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களே பஸ் பற்றாக்குறை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை 1,500 ற்கும் அதிகமான பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் பற்றாக்குறை நிலவுவதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Related posts: