இலங்கை போக்குவரத்து சபை சேவைகள் தொடர்பில் முறைப்பாடுகள் குறைவு!

கடந்த வருடத்திற்கு அமைவாக இந்த வருடத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் நாளாந்தம் 12 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் நாளாந்தம் 13 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் போக்குவரத்து சபையின் சேவைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
அத்துடன் 0117 555 555 என்ற இலக்கத்திற்கு அழைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.
Related posts:
நாளை வற் வரி சட்டமூலம் தொடர்பில் விவாதம்!
'Vision-2025' வெளியீடு!
சிறுமிக்குத் தலைக்கவசம் அணிவிக்காததால் மாமனாரையும் குற்றவாளியாக்கி வழக்குத் தொடுத்தனர் பொலிஸார் !
|
|