இலங்கை போக்குவரத்து சபையில் 285 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுறுதி – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Thursday, August 12th, 2021இலங்கை போக்குவரத்து சபையில் பல ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாகன ஒழுங்குறுத்துகை, பேருந்து போக்குவரத்து சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள், மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் சுமார் 285 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையில் பணிபுரியும் 285 பேர் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ள அவர் களுத்துறை சாரதி பயிற்சிப் பாடசாலையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கான சிகிச்சை மையம் திறக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைபர் ஸ்ரீலங்காவுடன் இணைந்து வடிவமையுங்கள்!
இரணைமடு குளத்தை பார்வையிட வருபவர்களுக்கு எச்சரிக்கை!
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மீண்டும் படையினருக்கு அழைப்பு!
|
|