இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 40 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சி — சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி வீரசூரிய சுட்டிக்காட்டு!

Saturday, January 30th, 2021

கொரோனா தொற்றுக் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 40 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

குறிப்பாக  ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையினால் இந்த வருமான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 45 தொடக்கம் 80 மில்லியன் ரூபாவிற்கிடையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன் தற்போது 4500 ற்கும் மேற்பட்ட இ.போ.ச பேருந்துக்ள சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நடவடிக்கை பிரிவு அதிகாரி வீரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: