இலங்கை போக்குவரத்து சபைக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு!

Thursday, July 18th, 2019

முகாமை சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதை தடுத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கு உரிய செயல்முறையை மீறி பதவி உயர்வு மற்றும் வேதன அதிகரிப்பு வழங்கப்படுவதன் ஊடாக அடிப்படை உரிமை மீறப்படுவதாக சுட்டிக்காட்டி இலங்கை போக்குவரத்து சபையின் இலங்கை சுதந்திர தேசிய சேவை தொழிற்சங்கம், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது.

இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 29 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: