இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ரூபா 721 மில்லியன் வருமானம்!

Wednesday, April 19th, 2017

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு சிறப்புச் சேவையை வழங்கிய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 11 நாட்களில் 721 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது என்று சபையின் முதன்மைச் செயற்திட்ட அதிகாரி பீ.எச்.ஆர்.ரீ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி முதல் 16ஆம் திகதி முற்பகல் வரையிலான காலப் பகுதியில் 5,600 மெலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.  இந்தக் காலப்பகுதியில் நாடு முழுவதும் 12 பிரதெசங்களில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் ஊவா, வடமேல், சபரகமுவ ஆகிய மாகாணங்களில் கூடுதல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திபதி மட்டும் 59.8 மில்லியன் ரூபாவை இலங்கை போக்குவரத்து சபைக்கு வருமானமாகக் கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார்.

Related posts: