இலங்கை பொலிஸ் துறையில் 46 பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகள் வெற்றிடங்கள்!

இலங்கை பொலிஸ் துறையில் 46 பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகள் இருந்த போதிலும் 6 பேர் மாத்திரமே தற்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் பதவி வகித்து வருகின்றனர். இதனடிப்படையில், 40 பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற வேண்டுமாயின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியில் 5 ஆண்டுகள் சேவையாற்றி இருக்க வேண்டும்.
இவ்வாறு 5 ஆண்டு சேவையை பூர்த்தி செய்த 8 அதிகாரிகள் மாத்திரமே இருப்பதாக கூறப்படுகிறது.இவர்களுக்கும் இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதற்கு பதிலாக 27 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
வித்தியா கொலை: வாகனம் வழங்கியவருக்கு சிறை!
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை வீழ்ச்சி - தேசிய டெ...
ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் 23 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது யாழ் மாநகரின் பாதீடு !
|
|