இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 9000 வெற்றிடங்கள்!

Monday, August 22nd, 2016

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் ஒன்பதாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் பணிகளுக்கு அப்பால் மேலும் பணிகளில் ஈடுபடுத்த நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் இவ்வாறு வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. விஹாரைகள் அரசாங்க நிறுவனங்கள் பிரபுக்கள் வீடுகள் போன்றவற்றிற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பணிகளுக்கு சிவில் பாதுகாப்புப் படையினரை கடமையில் ஈடுபடுத்துவதன் மூலம் பொலிஸ் திணைக்களத்தில் பதவி வெற்றிடங்கள் ஏற்படுவதனை தடுக்க முடியும் என பொலிஸ் தலைமையகத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Related posts: