இலங்கை பொலிஸ் என பெயர் மாற்றம்!

Wednesday, August 31st, 2016

150ஆவது வருட நிறைவோடு இலங்கை பொலிஸ் சேவையின் பெயர் “இலங்கை பொலிஸ்” (srilanka police) என்று அதிகாரபூர்வமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.தொடர்ந்து தெரிவிக்கையில், 1865ஆம் ஆண்டு “இலங்கை பொலிஸ் படையணி” என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளது.

1945இற்குப் பின்னர் “இலங்கை பொலிஸ் திணைக்களம்” என்று பெயர் மாற்றப்பட்டது.தொடர்ந்து 1972இல் “இலங்கை பொலிஸ் சேவை” என்று அழைக்கப்பட்டது.மேலும் தற்போது இலங்கை பொலிஸ் சேவையின் 150ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை பொலிஸ் சேவை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

Related posts: