இலங்கை பொலிஸார் தனிப்பட்டவர்களது சொத்தல்ல!

முன்னைய ஆட்சிக்காலத்தில் தனிப்பட்ட ஒருவரினால் வழங்கப்பட்ட வாய்மூல உத்தரவை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர விமர்சித்திருக்கிறார்.
24 மணித்தியாலங்களுக்குள் அத்திட்டிய பொலிஸ் பல்கலைக்கழகத்தின் நிர்மாணப் பணியை நிறுத்துமாறு முன்னைய ஆட்சிக் காலத்தில் வாய்மூல உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் தனியாட்களின் தனிப்பட்ட சொத்தாக இலங்கைப் பொலிஸார் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தின் பதிய நிர்வாகக் கட்டடம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய நிகழ்வின் போதே பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
முன்னைய ஆட்சிக்காலத்தின் போதான துரதிஸ்டவசமான சம்பவத்தினால் இலங்கைப் பொலிஸ் பாதிக்கப்பட்டிருந்தது. அத்திட்டியவிலுள்ள 18 ஏக்கர் நிலத்தில் பொலிஸ் பல்கலைக்கழகத்தின் நிர்மாணப் பணியை 24 மணித்தியாலங்களுக்குள் நிறுத்துமாறு எமக்கு வாய்மூல உத்தரவு கிடைத்திருந்தது. 325 மில்லியன் ரூபா செலவில் அந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்படவிருந்தது.
இலங்கைப் பொலிஸார் அவருடைய தனிப்பட்ட சொத்து என அந்த உத்தரவை வழங்கியவர் நினைத்தாரா என்று பொலிஸ்மா அதிபர் கேள்வி எழுப்பியுள்ளார். பொலிஸ் அதிகாரிகள் அவர்களின் உயர்கல்வி மட்டத்தை மேம்படுத்தக் கூடியதாக இருந்தால் அதனால் ஏற்படும் பெறுபேறுகள் தனிப்பட்ட அனுகூலங்களாக இருக்கமாட்டாது. பொது மக்களுக்கு சிறப்பான முறையில் சேவை வழங்குவதாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
Related posts:
|
|