இலங்கை புத்திசாலித்தனத்துடனும் நிதானத்துடனும் செயற்படவேண்டும் – அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகள் வேண்டுகோள்!

Tuesday, December 7th, 2021

பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களிற்கு எதிராக சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்ற பாக்கிஸ்தான் பிரதமரின் உறுதிமொழி குறித்து அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக இரு நாடுகளிற்கும் இடையிலான நீண்ட கால உறவு பாதிக்கப்படாது எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

துயரமான தருணத்தில் இலங்கை மக்கள் நாட்டின் அமைதி சகவாழ்வு நாட்டின் கௌரவம் ஆகியவற்றை காப்பாற்றுவதற்காக புத்திசாலித்தனமாகவும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதி நாட்டப்படுவதை இரு நாடுகளும் உறுதி செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான இம்தியாஸ் அலியா பில்லி  என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ராவல் பிண்டி பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

சியல்கோட் படுகொலை இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜய் விக்ரம உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தானும் இலங்கையும் நட்புறவு கொண்ட நாடுகளாகவே இருக்கும் என்றும் இச்சம்பவம் எமது உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தான் உறுதியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரியந்தவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் இது ஒரு கொலை என்பதால், இந்த சம்பவத்திற்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாகிஸ்தான் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பதை தாங்கள் அவதானித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தாங்கள் நண்பர்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் சமூக, பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் உள்ளன என்பதுடன், இந்த சம்பவம் தற்போதுள்ள உறவை பாதிக்காது என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: