இலங்கை புகையிரத திணைக்களத்தின் வருமானம் உயர்வு!

புகையிரத கட்டணங்கள் அதிகரித்த நிலையில், புகையிரத திணைக்களத்தின் வருமானமும் அதிகரித்திருப்பதாக புகையிரத பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
புகையிரத கட்டணங்களுக்கு அமைய புதிய பயணச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செயப்படும் புகையிரத தொகுதியின் முதலாவது தொகுதி அடுத்தவாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இவ்வாறு கொண்டுவரப்படும் புகையிரத தொகுதியின் முதலாவது பரீட்சார்த்த பயணம் கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
அதன் தரத்தின் அடிப்படையில், எஞ்சிய புகையிரத தொகுதிகளும் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Related posts:
இலங்கை அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றும் திட்டம்!
இரு மாதங்களில் உயர்தர, சாதாரணதர முடிவுகள் - 2018 முதல் ஏற்பாடு - கல்வி அமைச்சு!
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் மே 08 முதல் ஆரம்பம்!
|
|