இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகு அவுஸ்திரேலியாவை சென்றடைந்தது!

Tuesday, May 3rd, 2016
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில், திங்கட்கிழமை காலையில் இப் படகு கொகோஸ் தீவுகளை அடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது..
கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
10 முதல் 11 மீற்றர் நீளமான மரத்திலான படகு ஒன்றில் 12 பேர் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இது தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் பேச்சாளரோ, எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரோ கருத்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related posts: