இலங்கை பிரஜை ஒருவர் சவுதியில் கொலை!

இலங்கையர் ஒருவர் சவுதியில் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட நபரின் அறையில் தங்கியிருந்த மற்றும் ஒரு நபரினால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி ரியாத் நகரில் கண்ணாடி தொழிற்சாலையில் பணிபுரியும் 32 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில்,சடலம் அவர் தங்கியிருந்த அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யேமன் நாட்டு பிரஜையொருவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.
இதேவேளை, குறித்த கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தை!
உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை - வர்த...
|
|