இலங்கை பாதுகாப்பு செயலாளர் சீனா விஜயம்!

Tuesday, October 18th, 2016
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி  தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் சீன அரசாங்கத்தின் பாதுகாப்பு தலைமை அதிகாரியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.

சீன அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சீனாவுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது சீன அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சருமான ஜெனெரல் சங் வாங்குஆன்ஐ (General Chang Wanquan) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பாதுகாப்பு துறையில் இரு தரப்பு ஒத்துழைப்புக்களை வலுவூட்டும் வகையில் சீன பாதுகாப்பு அமைச்சரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் சார்பில் அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து சீனா இலங்கை இரண்டாவது பாதுகாப்பு புரிந்துணர்வு பேச்சுவார்த்தையிலும் கலந்து கொண்டார். இதன் போது இரு நாடுகளுக்கிடையிலான மிகவும் முக்கியமான பாதுக்காப்பு புரிந்துணர்வு (Defence cooperation), உயர்மட்ட பட்ட பரிமான வேலைத்திட்டம்(High level exchanges) இராணுவ ஒத்துழைப்பு (Military assistance) பயிற்சிக்கான சந்தர்ப்பம் (Training opportunities) பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இரு நாட்டு புத்தியீவிகளும் ஒன்றிணைந்து செயற்படும் வேலைத்திட்டம் (Collaboration between defence think tanks), புலனாய்வு ஒத்துழைப்பு (Iintelligence cooperation ) கூட்டு இராணுவப்பயிற்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை செயலமர்வு, மகாநாட்டுக்கான ஒத்துழைப்பு (Participation in defence seminars, workshops and symposia) ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன.

இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பல விடயங்கள் இருதரப்பினருக்கும் இடையில் பலவிடயங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இருப்பினும் 120 மில்லியன் RMB பெறுமதியான இராணுவ உதவி மற்றும் இலங்கைக்கு கடற்பாதுகாப்புக்காக ஆழ்கடலை கண்காணிக்க கூடிய படகு (Offshore Patrol Vessel – OPV ) வழங்குவது தொடர்பான அரண்டு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

குறித்த இந்நிகழ்வின் சீன தூதுக்குழுவினருக்கு, கூட்டு அதிகாரிகள் துறை, மத்திய இராணுவ ஆணையகம் மற்றும் சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான சீன நிறுவனம் (CIISS) என்பவற்றின் துணை தலைவர் எட்மிரல் சன் ஜியான்குவோ அவர்கள் தலைமை தாங்கினார்.

இலங்கை தூதுக்குழுவில் விமானப்படை தளபதி, எயார் மாஷல் கபில ஜயம்பதி, கடற்படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி ரியர் எட்மிரல் எஸ் எஸ் ரணசிங்க, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எச் சீ பி குணதிலக, பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு அலுவர்கள் தொடர்பான சிரேஷ்ட உதவிச் செயலாளர் சசிகலா பிரேமவர்த்தன மற்றும் இலங்கையின் சார்பில் இதற்காக சீனாவின் இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் திலக் வீரக்கோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

3112af2a0f2a5c48160001efc41f2f39_L

Related posts:

யாழ்ப்பாணச் சமுர்த்திப் பயனாளிகளில் அரைவாசிப் பேர் அதை இழக்கும் நிலை : புதியவர்களை இணைத்துக் கொள்ளத்...
பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தவறியுள்ளனர் - கொரோனா பரவல் தொடர்பில் ஜனாதிபதி குற்றச்சாட்டு...
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் பலி – 600 க்கும் மேற்பட்டோர்...