இலங்கை பலவகையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது- ஈராக் ஜனாதிபதி!

Thursday, September 8th, 2016

இலங்கை பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்தமை பாராட்டப்பட வேண்டும் என ஈராக்கின் ஜனாதிபதி Fuad Masum தெரிவித்துள்ளார் என வெளியுறவுத் துறை அமைச்சுதெரிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஈராக்கிற்கான இலங்கையின் புதியதூதுவர் நிரஞ்சன் அசோக ரணசிங்கவிற்கு நியமனம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போதே ஈராக்கின் ஜனாதிபதி Fuad Masum மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது வாழ்த்துக்களைதெரிவிக்குமாறு தூதுவரிடம் ஈராக்கின் ஜனாதிபதி Fuad Masum கேட்டுக்கொண்டார்.2015ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை பல அபிவிருத்திதிட்டங்களில் முன்னேற்றமடைந்துள்ளது என ஈராக்கின்ஜனாதிபதி Fuad Masum தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது இலங்கை மற்றும் ஈராகிற்கு இடையிலான இராஜதந்திர உறவுகளைவலுப்படுத்தும் நோக்கில் மேலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1031304722_07092016_kaa_cmy

Related posts: