இலங்கை நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்பதாக ஐநா செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, July 14th, 2022

ஆர்ப்பாட்டக்காரர்களின் துயரங்களிற்கும் தீர்வை காண்பது அவசியம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார் டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நிலவரத்தை நான் உன்னிப்பாக  அவதானித்துக்கொண்டிருக்கின்றேன். மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் துயரங்களிற்கும் தீர்வை காண்பது அவசியம்.

அமைதியான மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான சமரச மனப்பான்மையை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வன்முறைகளில் இருந்து விலகி அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து வன்முறைகளையும் கண்டிப்பதாகவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனைத்துத் தரப்பினரும் அமைதியான முறையில் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: