இலங்கை நிதி தொடர்பான கோரிக்கையை விடுத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Friday, February 4th, 2022

இலங்கை நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி இதனைத் தெரிவித்துள்ளாரென வெளிநாட்டு ஊடகமொன்றை மேற்கோள்காட்டி செய்திகள்  வெளியாகியுள்ளன..

பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னதாக தெரிவித்திருந்தார்.

அதேநேரம், நிதி அமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே இலங்கை நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம்!
வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய வாரத்தை பிரகடனப்படுத்த போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோ...
பயனாளிகளை தேர்வு செய்வதில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவிப்பது அவசியம்...